கடந்த சில மாதங்களாகவே ஒட்டு
மொத்த தமிழகத்தின் கவனத்தையும் ஈர்த்து வந்த ஒரு வழக்கு, மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஜா க்ரிஸ்டில்லா இடையேயான குழந்தை விவகாரம். யார் அந்தக் குழந்தையின் தந்தை என்ற கேள்வி பலருக்கும் ஒரு மர்ம முடிச்சாகவே இருந்து வந்தது. இந்நிலையில், நீண்ட போராட்டத்திற்குப் பிறகு, அந்த உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது!
சில காலத்திற்கு முன்பு, ஜா க்ரிஸ்டில்லா அவர்கள் திடீரென மாதம்பட்டி ரங்கராஜ் தனது குழந்தைக்குத் தந்தை என்றும், இரண்டு ஆண்டுகள் தாங்கள் ஒன்றாக வாழ்ந்ததாகவும், ஆனால் ரங்கராஜ் குழந்தை பெற்றதும் பொறுப்பை ஏற்க மறுப்பதாகவும் கூறி, ஆணையர் அலுவலகத்திலும், பின்னர் மகளிர் ஆணையத்திலும் புகார் அளித்தார். தான் கர்ப்பமாக இருப்பதாகவும், தனக்கும் தன் குழந்தைக்கும் அவர்தான் பொறுப்பு என்றும் கண்ணீருடன் கோரிக்கை வைத்தார். ஆரம்பத்தில் ரங்கராஜ் இந்த வழக்கில் அதிகம் தலையிடாமல் இருந்த நிலையில், மகளிர் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்ட பிறகு, தனது மனைவியுடன் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். இந்த வழக்கு சென்னை குடும்பநல நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. நீதிமன்றத்தில் மாதம்பட்டி ரங்கராஜ், டிஎன்ஏ சோதனை செய்து குழந்தை என்னுடையது என்று நிரூபணமானால், அதன் மொத்த செலவையும் தானே ஏற்றுக்கொள்வதாகவும், குழந்தையின் பொறுப்பு முழுமையாக தன்னுடையது என்றும் உறுதியளித்திருந்தார்.
ஆனால், இந்த வாக்குறுதிக்கு மாறாக, அவர் டிஎன்ஏ சோதனைக்கு வர மறுப்பதாக ஜா க்ரிஸ்டில்லா மீண்டும் மீண்டும் குற்றம் சாட்டினார். இது நீதிமன்றத்திலும் சமூக ஊடகங்களிலும் பெரும் விவாதப் பொருளாக மாறியது. இறுதியாக, இந்த வழக்கு ஒரு முக்கியமான கட்டத்தை அடைந்தது. கடந்த மார்ச் 5ஆம் தேதி, மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் குழந்தையின் டிஎன்ஏ பரிசோதனை நடைபெற்றது. இந்த பரிசோதனையின் முடிவுகள் இன்று வெளியாகின.
சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த விசாரணையில், நீதிபதி செந்தில்குமார் அவர்கள், டிஎன்ஏ முடிவுகளின்படி மாதம்பட்டி ரங்கராஜ் தான் அந்தக் குழந்தையின் உயிரியல் தந்தை என்பதை உறுதிப்படுத்தியுள்ளார். நீண்ட கால சந்தேகங்களுக்கும் ஊகங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் இந்த அறிவிப்பு, பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இப்போது ஒட்டுமொத்த தமிழகமும் அடுத்த கேள்வியுடன் காத்திருக்கிறது: மாதம்பட்டி ரங்கராஜ் இந்தத் தீர்ப்புக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்? தனது வாக்குறுதிப்படி குழந்தையின் பொறுப்பை அவர் ஏற்பாரா?
ஜா க்ரிஸ்டில்லாவின் அடுத்த நகர்வு என்னவாக இருக்கும்? உண்மை வென்ற இந்த வழக்கில், இனி என்னென்ன திருப்பங்கள் வரப் போகின்றன என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!

0 கருத்துகள்