தமிழக அரசியலில் ஒரு புதிய சகாப்தம்: தளபதி விஜயின் வருகை!
தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு மிகப்பெரிய மாற்றத்திற்கான அஸ்திவாரம் 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் மூலம் இடப்பட்டுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். சுமார் ஆறு சதாப்தங்களாக தமிழகத்தை ஆண்டுவந்த திராவிடக் கோட்டைகள் தற்போது தகர்க்கப்பட்டு வரும் நிலையில், தமிழ்நாட்டு வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், அந்தக் கோட்டையை நோக்கி வெற்றிநடை போடுவார் என பலமாக எதிர்பார்க்கப்படுகிறது.
'சொன்னதை செய்வார் தளபதி' என்று நம்பி வாக்களித்த கோடிக்கணக்கான மக்களுக்காக அவர் முன்னுரிமை கொடுத்து நிறைவேற்றப் போகும் அந்த 'டாப் 10' வாக்குறுதிகள், தமிழகத்தின் தலையெழுத்தையே மாற்றி அமைக்கும் என கணிக்கப்படுகிறது. இந்த வாக்குறுதிகள் இந்தியாவையே வியக்க வைக்கும் அதிரடி திட்டங்களாக உருவெடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.
தளபதி விஜயின் 'டாப் 10' அதிரடி வாக்குறுதிகள்!
தளபதி விஜயின் தலைமையிலான புதிய அரசின் முதல் இலக்காக, குடும்பத் தலைவிகளின் பொருளாதார சுதந்திரம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, தமிழகத்தில் உள்ள தகுதியுள்ள ஒவ்வொரு குடும்பத் தலைவிகளுக்கும் மாதந்தோறும் ₹2500 நிதி உதவியும், ஆண்டுக்கு ஆறு இலவச சமையல் எரிவாயு சிலிண்டர்களும் வழங்கும் திட்டம் போர்க்கால அடிப்படையில் முதற்கட்டமாக அமல்படுத்தப்படும். இது சாமானிய மக்களின் அன்றாட வாழ்க்கைச் சுமையைக் குறைப்பதோடு, ஒவ்வொரு வீட்டிலும் ஒரு பொருளாதார நிலைத்தன்மையை உருவாக்கும் என நம்பப்படுகிறது.
இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புப் புரட்சி:
இதனைத் தொடர்ந்து, தமிழக இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பில் ஒரு மாபெரும் புரட்சியை ஏற்படுத்த விஜய் திட்டமிட்டுள்ளார். சுமார் 5 லட்சம் புதிய அரசு வேலைவாய்ப்புகளுடன், 'முதலமைச்சரின் மக்கள் சேவை உதவியாளர்' என்ற புதிய திட்டத்தின் மூலம் கிராம அளவில் மேலும் 5 லட்சம் பேருக்கு வேலை வழங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
கல்வி மற்றும் சுகாதாரம்: புதிய மாற்றங்களின் தூண்கள்!
கல்வி மற்றும் சுகாதாரம் ஆகிய இரண்டு முக்கிய துறைகளிலும் விஜய் அறிவித்துள்ள அதிரடி திட்டங்கள் இந்தியாவையே வியக்க வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாணவர்களின் உயர்கல்விக் கனவை நனவாக்க ₹20 லட்சம் ரூபாய் வரை வட்டியற்ற கல்விக்கடன் மற்றும் வேலை தேடும் பட்டதாரிகளுக்கு மாதந்தோறும் ₹4000 உதவித்தொகை வழங்கும் திட்டங்கள் இளைஞர்களுக்கு ஒரு மிகப்பெரிய பாதுகாப்பை தரும். அதேபோல், ஏழை எளிய மக்கள் மருத்துவத்திற்காக தங்களது சொத்துக்களை விற்கும் நிலையை மாற்ற, ஒரு குடும்பத்திற்கு ₹25 லட்சம் ரூபாய் வரையிலான பிரம்மாண்ட மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் புதிய ஆட்சியில் முன்னுரிமை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விவசாயிகள் மற்றும் சமூக பாதுகாப்பிற்கான திட்டங்கள்:
விவசாயிகளின் துயர்துடைக்க கூட்டுறவு விவசாயக் கடன்கள் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படுவதோடு, 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருப்பவர்களுக்கு 50% கடன் தள்ளுபடி வழங்கப்படும். சமூகப் பாதுகாப்பு மற்றும் கலாச்சார ரீதியான நலத்திட்டங்களிலும் விஜய் ஒரு புதிய பாதையை வகுப்பார். ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு 8 கிராம் தங்கம் மற்றும் பட்டுப்புடவை வழங்கும் 'அண்ணன் சீர் திட்டம்', பள்ளி மாணவர்களின் இடைநிற்றலைத் தவிர்க்க தாய்மார்களுக்கு ஆண்டுக்கு ₹15000 ரூபாய் வழங்கும் கல்வி உதவித்தொகை போன்றவை அடிமட்ட மக்களின் வாழ்வை மேம்படுத்தும் என பலமாக நம்பப்படுகிறது.
பெண்கள் பாதுகாப்பு மற்றும் எதிர்காலத் தலைமுறையினர்:
பெண்களின் பாதுகாப்பிற்காக 'ராணி வேலு நாச்சியார்' என்ற தனிப்படை அமைப்பதும், போதைப்பொருள் இல்லாத தமிழகத்தை உருவாக்குவதும் இந்த அரசின் மிக முக்கிய நோக்கங்களாக இருக்கும். இதுதவிர, புதிதாகப் பிறந்த குழந்தைகளின் தாய்மார்களுக்கு தங்கம் மற்றும் தங்க மோதிரம் வழங்கும் 'தாய்மாமன் தங்க மோதிரம்' போன்ற நிகழ்ச்சியான திட்டங்களும் விரைவில் செயல்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
0 கருத்துகள்